மாவட்ட தலைநகரங்களில் நவீன மதுபான கடை

சென்னையை தொடர்ந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், நவீன மதுபான கடைகள் துவக்க, 'டாஸ்மாக்' அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில், 'குடிமகன்'கள் கூட்டம் நிரம்பி வழிவதால், உயர் வருவாய் பிரிவினர், சுற்றுலா பயணிகள் உட்பட பலர், மதுபானம் வாங்க சிரமப்படுகின்றனர். டாஸ்மாக் மதுபான விற்பனை குறைவுக்கு, இதுவும் காரணம் என, கூறப்பட்டது.இதையடுத்து, சென்னையில்ஏழு இடங்களில், பார் வசதி இல்லாமல், நவீன மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.எனவே, 'சென்னையை தொடர்ந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், நவீன மதுபான கடைகளை உடனடியாக துவக்க வேண்டும்' என, டாஸ்மாக் அதிகாரிகள், மாவட்ட மேலாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.இதையடுத்து, கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில்,'பூருக் பீல்ட்ஸ்' மாலில், நவீன மதுபான கடை துவக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...