'குறித்த நேரத்தில் பெரியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு'

''பெரியார் பல்கலையில், குறித்த தேதியில் தேர்வு நடைபெறுவதற்கும், குறித்த நேரத்தில் தேர்வு முடிவு வெளியிடும் வகையிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பெரியார் பல்கலை, புதிய
துணைவேந்தராக பதவியேற்ற, பேராசிரியர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்த, முத்துச்செழியன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2013 செப்டம்பர் முதல், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் தலைமையிலான துணைவேந்தர் குழு, நிர்வாகத்தை கவனித்து வந்தது. பெரியார் பல்கலை, ஆறாவது துணைவேந்தராக சுவாமிநாதனை நியமித்து, கவர்னர் ரோசையா உத்தரவிட்டார். விவசாய குடும்பத்தை சேர்ந்த சுவாமிநாதன், ஈரோடு மாவட்டம், திங்களூரை சேர்ந்தவர். நேற்று சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக பதவியேற்ற சுவாமிநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் பல்கலையில், குறித்த தேதியில் தேர்வு நடைபெறுவதற்கும், குறித்த நேரத்தில் தேர்வு முடிவு வெளியிடும் வகையிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் திறனை மேம்படுத்த, பாடத்திட்டத்துடன் கூடுதல் தொழில்நுட்ப கல்வி வழங்க, மாற்றம் செய்யப்படும். பெரியார் பல்கலையில் ஆய்வுகள் மேம்படும் வகையில், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். அதில், சிண்டிகேட் குழு அனுமதியுடன், முதல்கட்டமாக, ஒவ்வொரு துறைக்கும் ஆய்வு உறுப்பினர் ஒருவர் கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, 4,000 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...