அழகப்பா பல்கலை துணைவேந்தர் யார்: தேர்வுக்குழு இன்று கூடுகிறது

அழகப்பா பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழு சென்னையில் இன்று கூடுகிறது. இதில், மூவர் பெயர் கவர்னரிடம் பரிந்துரைக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு துணைவேந்தராக இருந்த சுடலைமுத்துவின் பதவிக்காலம், 2013 செப்., 26-ல் முடிவடைந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், உறுப்பினராக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலைச்சாமி, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஆளுடையபிள்ளை, மதுரை தியாகராஜர் கல்விக் குழும தலைவர் கருமுத்து கண்ணன், காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஓஷா நியமிக்கப்பட்டனர். இக்குழு பலமுறை கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற வழக்கு, லோக்சபா தேர்தல் ஆகியவற்றால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. வழக்கு முடிந்த நிலையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பான நடவடிக்கை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜூன் 13ல், சேலம் பெரியார் பல்கலைக்கு, கோவை பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு முத்துக்குமார் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், அழகப்பா பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழு சென்னையில் இன்று கூடுகிறது. இதில் மூவர் பெயர் இறுதி செய்யப்பட்டு, கவர்னருக்கு பரிந்துரைக்கப்படும். இதனால், துணைவேந்தர் யார்? என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...