மாணவர் சிறப்பு பஸ் திட்டத்தில்
இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் பஸ்
இயக்க
கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரியில் தினந்தோறும் தனியார் பஸ்களில் பணம் செலவு செய்து, நெருக்கடியில் சிக்கி செல்லும் மாணவர்கள் வசதிக்காக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மாணவர் சிறப்பு பஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டன் கீழ் ஒரு ரூபாய் கட்டணத்தில் கிராமப் பகுதியில் இருந்து மாணவர்கள், நகரப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இத்திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அமோக ஆதரவு பெற்றுள்ளது.
புதுச்சேரியில் 55 பஸ்களும், காரைக்காலில் 13 பஸ்கள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன. மாணவர் சிறப்பு பஸ்களில், அனைத்து வயது மாணவ, மாணவிகளும் பயணிப்பதால் சில பிரச்னை உருவாகி கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்படும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் சிறப்பு பஸ்களை இயக்க கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கான புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டது.
பழைய முறையில் 28 வழித்தடங்களிலும் 2 பஸ்கள் வீதம் இயக்கப்பட்டு வந்தது. அதே வழித்தடத்தில் இந்த கல்வி ஆண்டிலிருந்து ஆண், பெண் என தனித்தனியாக 2 பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஒரு பஸ் மட்டும் பி.ஆர்.டி.சி. மூலம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் மாணவிகள் பயணிக்கும் பஸ்சும், அதற்கு அடுத்து சில நிமிடங்கள் கழித்து மாணவர்கள் பயணிக்கும் பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.