வகுப்பறைகள் மனிதனை உருவாக்கும் பட்டறை

்: வகுப்பறைகள் முழு மனிதனை உருவாக்கும் பட்டறையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில் வடலிவிளை அரச தொடக்கப்பள்ளியில் அரசின் இலவச பாட நோட்டு புத்தகங்களை வழங்கி அவர் பேசியதாவது: இளம் வயதில் மாணவர்களை அடையாளப்படுத்தி பிரிக்காமல் அனைவரும் சமமாக இருந்து கற்க கூடிய நேர்மையான வகுப்பறைகளை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை.
ஒவ்வொரு மாணவரின் உள்ளாற்றலை, அக்கறையை புரிந்து கொண்டு அதை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பிக்கும் வழியில் காலத்துக்கேற்ற மாற்றம் ஏற்படுத்த வேண்டும். பாடப்புத்தகத்தில் சிக்கிய வகுப்பறையாக இல்லாமல், மனிதனை உருவாக்கும் பட்டறைகளாக வகுப்பறைகள் மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...