2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது.
இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த பிப்ரவரியில் வெளியான அரசாணையில் 55சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களுக்கு 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களைக் காட்டிலும் 6 மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது. அதாவது 55 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிபெண் 36 எனவும் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிப்பெண் 42 எனவும் வழங்கப்பட்டது. கிரேடு முறையில் அமைந்த இம்முறையை ரத்து செய்து அறிவியல் பூர்வ முறையை கடைபிடிக்க வேண்டுமென கடந்த ஏப்ரலில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் ஜீன் 4ந் தேதி புதிய அறிவியல் பூர்வ முறையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. அதன்படி ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கும் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஒரே கணக்கீடு முறையை வழங்கியள்ளது. தளர்வின் மூலம் தேர்ச்சிபெற்றவரின் டெட் மதிப்பென்ணை (55 சதவீதம் பெற்று மட்டுமே தேர்ச்சி பெற்றதால்) 55க்கு மட்டுமே கணக்கிட வேண்டும் ஆனால் அரசாணையில் 60க்கு கணக்கிட கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்க்கிடும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சற்று குறைவாக பெற்றிருந்தாலும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. உதாரணமாக டெட் மதிப்பெண் 89 எனில் 89 x 60 = 35.59 150 89 x 55 = 32.63 150 வித்தியாசம் = 2.96 புள்ளி ஒரு மதிப்பெண்ணில் கூட வேலைவாய்ப்பை இழக்கும் அபாய நிலையில் ஏறத்தாழ 3 மதிப்பெண்களை புதிதாக தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் பெருகின்றனர். பழைய அரசானையில் கூட அவர்களுக்கு 95 மதிப்பெண்களுக்கு மட்டுமே வெய்டேஜ் கணக்கீடு செய்யப்பட்டது ஆகவே ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் வேலைவாய்ப்பினை பறிக்காதவண்ணம் புதிய அரசாணையில் தெளிவுரை வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.