10 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி: மாணவன் சாதனை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள துர்காபுராவைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றுள்ளான்.
ராஜஸ்தானில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், துர்காபுராவைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியரின் 10 வயது மகன் அப்பாஸ் 60.83 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான்.
பத்து வயது மாணவன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளது, மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வியப்படைய வைத்துள்ளது. மாணவன் பள்ளி போக ஆரம்பித்தது முதல் அவனின் பெற்றோர், தீவிரமாக பாடம் நடத்தி வந்ததே மாணவனின் இந்த வெற்றிக்கு காரணம் என, கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...