ஏழை மாணவியின் பட்டப் படிப்புக்கு வாய்ப்பளித்த தியாகராசர் கல்லூரி

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், எங்கு சேர்வது என்ற நிலையில் தவித்த ஏழை மாணவிக்கு
தியாகராசர் கல்லூரியில் பயில, நிர்வாகம் இடமளித்துள்ளது.
மதுரை விரகனூர் அணை அருகே சாலையோரம் கரும்புச்சாறு விற்பனை செய்யும் சக்திவேல் மகள் சுகுணா (படம்). இவர் பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1040 மதிப்பெண்கள் பெற்றார். இளங்கலை வணிகவியலில் சேர்ந்து பட்டம் பெற விரும்பிய அம்மாணவிக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காதது குறித்து தினமணியில் ஜூன் 1-ஆம் தேதி செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராசர் கல்லூரி தலைவர் கருமுத்து தி.கண்ணன், செயலர் உமாகண்ணன் ஆகியோர் ஏழை மாணவிக்கு கல்லூரியில் இடமளித்து, பட்டப்படிப்புக்கு வாய்ப்பளிக்குமாறு கல்லூரி முதல்வரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவியைக் கல்லூரி முதல்வர் தரப்பில் வரவழைத்து மதிப்பெண் சான்று உள்ளிட்டவற்றை சரிபார்த்து மாணவி விரும்பிய பி.காம். பட்டப்படிப்பில் சேர்த்துள்ளனர். மாணவியும் விரும்பியவாறு தியாகராசர் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை சக்திவேல் கூறுகையில், எனக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில், சுகுணா மட்டும் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பட்டதாரியாக ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாணவிக்கு இடமளித்து உதவியதற்காக தியாகராசர் கல்லூரித் தலைவர் மற்றும் செயலருக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...