ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 9
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் ஜூன் 2 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்வமுள்ள மாணவர்களை ஈர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...