சேலம் மாவட்டத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வி.ஏ.ஓ.,க்கள் பணி
நியமன உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது. அவர்கள் ஏற்கனவே, பணியாற்றிய தாலுகாவில், மீண்டும் பணி புரிய நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதனால், வி.ஏ.ஓ.,க்களின், 16 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், ஜூன், 18ம் தேதி, நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், கலெக்டர் மகரபூஷணம் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பட்டா வழங்குதல் தொடர்பாக எழுந்த சர்ச்சையால், உடையாப்பட்டி வி.ஏ.ஓ., திருநாவுக்கரவு, மல்லூர் வி.ஏ.ஓ., செந்தில்குமார், தாலுகா உதவியாளர் செந்தில் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.
கலெக்டரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்ட வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் மாவட்ட அளவில், தாலுகா அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டது. மாநில நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
ஜூலை, 2ம் தேதி தமிழகம் முழுவதில் இருந்து, சேலத்தில் குவிந்த, வி.ஏ.ஓ.,க்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 745 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு, 17 ஏ(விளக்க குறிப்பாணை) நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மாநில நிர்வாகிகள், டி.ஆர்.ஓ., விடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டம் வாபஸ் பெற இருந்த நிலையில், "பழைய இடத்தில், போஸ்டிங் கிடையாது. மாற்று தாலுகாவில் தான் கிடைக்கும். 17 ஏ விலக்கி கொள்ளப்படமாட்டாது' என, வி.ஏ.ஓ.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிருப்தி அடைந்த, வி.ஏ.ஓ.,க்கள், டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வது குறித்து பரிசீலனை செய்தனர். இதனால், மாநிலம் முழுவதும் பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என்பதால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை, வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆர்.டி.ஓ., லலிதாவதி, துணை கலெக்டர் (சிறப்பு திட்டங்கள்) ரவிக்குமார், ஆகியோரை, வி.ஏ.ஓ., சங்கத்தின் மாநில தலைவர் சிவசாமி, பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், சேலம் மாவட்ட தலைவர் முனுசாமி உள்ளிட்ட, வி.ஏ.ஓ.,க்கள் சந்தித்தனர்.
மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தின் உத்தரவுக்கு ஏற்ப, ஆர்.டி.ஓ., லலிதாவதி, திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, அதற்கான உத்தரவு நகலை அவர்களிடம் வழங்கினார்.
உடையாப்பட்டியில் பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மல்லூரில் பணியாற்றி வந்த செந்தில்குமார், சேலம் மேற்கு தாலுகாவில் உள்ள, ஜாகீர் அம்மாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரவு நகலை, திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோர் பெற்று கொண்டனர். ஏற்கனவே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாலுகா உதவியாளர் செந்தில், மூன்று நாட்களுக்கு முன்பே, சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓமலூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, வி.ஏ.ஓ.,க்கள் மாநில பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ""மாவட்ட நிர்வாகம், ஊழியர்களை அரவணைத்து செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறாமல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது,'' என்றார்.
கடந்த ஜூன், 23ம் தேதி முதல், வி.ஏ.ஓ.,க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், பணிக்கு செல்லாமல், மாலை நேரங்களில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். 16 நாட்களாக, நடந்து வந்த போராட்டம், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், முடிவுக்கு வந்துள்ளது.