அது ஒரு அழகிய கிராமம் மட்டுமல்ல -Gobi Ayyappan Tr

நேற்று எங்கள் நண்பர் திருமுருகன் நிச்சயதார்த்தத்திற்கு புதுக்கோட்டைக்கு அருகே உள்ள பெருஞ்சுனை கிராமத்திற்குச்
சென்றிருந்தோம். அது ஒரு அழகிய கிராமம் மட்டுமல்ல அது ஒரு வாழும் வராலாறாகத் திகழும் எனக்கு மிகவும் பிடித்த " லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர்த்து" என்னும் வார்த்தைகளை தம் வாழ்நாள் கொள்கையாகக்கொண்டு தீரத்துடன் பணிபுரியும் உயர்திரு சகாயம்IAS அவர்கள் பிறந்த ஊர். அம் மண்ணில் நிற்கும்போது ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. அப்போது அவ்வூர் பெரியவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் திரு. சகாயம் அவர்களைப்பற்றிக் கூறிய ஒரு சம்பவம் உண்மையிலேயே நெகிழ வைத்தது. ஆம். தம் சிறிய வயதில் திரு.சகாயம் அவர்கள் ஒரு மாமரத்திலிருந்து ஒரு மாங்காயை எடுத்துக் கொண்டு தம் வீட்டுக்கு வந்ததாகவும் இதனைக் கண்ட அவரின் தாய் அவருக்கு உணவு தர மறுத்து அந்த மாங்காயை மீண்டும் கொண்டு சென்று எடுத்த இடத்தில் திரும்ப போட்டுவிட்டு வந்தால்தான் அவருக்கு சாப்பாடு வழங்கப்படும் என்று கூறியதோடுமட்டுமல்லாமல் அவர் அதனைப் போட்டுவிட்டு வந்தபின்புதான் அவருக்கு சாப்பாடு வழங்கியதாகவும் கூறினார். அந்தத் தாயின் அத்தகைய வளர்ப்புதான் இவரை இத்தகைய நேர்மைக்குக்காரணம் என என்னும்போது உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது. தம் இனத்தைச் சேர்ந்தவனுக்கும், லஞ்சம் கொடுப்பவனுக்கும்,பரிந்துரை செய்பவனுக்கும்,காக்கா பிடிப்பவனுக்கும் சேவை செய்யும் பொருட்டு உண்மையையும், நேர்மையையும் குழி தோண்டிப் புதைத்து எண்ணற்ற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் எத்தனையோ கேவலமான அதிகாரிகளுக்கு மத்தியில் இவர்போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர் போன்றோருக்கு நம்மவர் செய்யும் மரியாதை என்ன தெரியுமா? அடிக்கடி பணி மாறுதல். ஆம். இத்தேசத்துக்குத்தான் நல்லவர்களைக் கண்டால் பிடிக்காதே. கவலைப்படாதே நேர்மையே. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்! இதுதான் வரலாறு. சகாயமே நீ ஒரு சகாப்தம்! வாழ்க நின் புகழ்! என்றும் வாழியவே!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...