220 நாடுகளுக்கு இந்திய மருந்துகள் குறைந்த விலையில் ஏற்றுமதி'

உலகில் உள்ள 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்படுவதாக இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐ.எம்.டி.ஏ.) தெரிவித்தது.

ஐ.எம்.டி.ஏ. தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வாரியத்தின்
சார்பில் மருந்துகள் குறித்த "பார்மாக் சௌத் 2014' என்ற தலைப்பிலான 2 நாள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியை ஐ.டி.எம்.ஏ. தலைவர் எஸ்.வி.வீரமணி, துணைத் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசியது:

மருந்துகள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் மதிப்பின் அடிப்படையில் 14-ஆவது இடத்தில் உள்ளது. காரணம், உலகிலேயே இந்தியாவில்தான் தரமான மருந்துகள் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே உலகின் 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் மொத்த மருந்துகளில் 10 சதவீதம் இந்திய தயாரிப்பாகும். தரமான மூலப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் வெளிநாடுகளில் இந்திய மருந்துகளுக்கு மிகுந்த வரவேற்புள்ளது.

தமிழகத்தில் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள் புதிதாக தயாரிக்க கடந்த சில ஆண்டுகளாக அரசு உரிமம் வழங்கவில்லை. இதனால் அந்த மருந்துகளைத் தயாரிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆயுர்வேத, சித்த மருந்துகளை புதிதாக தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருங்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் முறை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி ஐ.டி.எம்.ஏ. சார்பில் நடத்தவுள்ளோம்.

இந்திய மருந்துகள் தயாரிப்பில் அரசின் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதுடன் அரசு நிர்ணயித்த விலையில்தான் மருந்துகள் விற்கப்படுகின்றன. போலியான மருந்துகளை தயாரிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்குரியது என்றனர்.

முன்னதாக "பார்மாக் சௌத் 2014' கண்காட்சி மலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் எஸ்.அப்துல்காதர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தென் மண்டலத்துக்கான மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.மணிவண்ணன், ஜ.எம்.டி.ஏ. தமிழ்நாடு பிரிவின் தலைவர் எம்.ராஜரத்தினம், மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் திலீப் சுரானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...