அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில், அண்டை நாடான சீனா, அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளதாக அறிக்கை
ஒன்று தெரிவிக்கிறது.
The Observer Research Foundation என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.88% மட்டுமே, அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்குகிறது.
இதன்மூலம், அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகவும் குறைந்தளவு நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுகிறது.
ஆனால், அமெரிக்காவில் 7% முதல் 8% வரையும், தென்கொரியாவில் 3% முதல் 4% வரையும் ஒதுக்கப்படுகின்றன.
இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு(R&D) துறை முதலீட்டில், கால் பங்கிற்கும் அதிகமாக, அடிப்படை ஆராய்ச்சிக்கு செல்கிறது. சீனாவில் 5% மற்றும் அமெரிக்காவில் 17% அடிப்படை ஆராய்ச்சிக்கு செல்கின்றன.
இந்தியாவின் இந்த நிலைக்கு, கல்வி அமைப்பும் குற்றம் சாட்டப்படுகிறது. பட்டம் வாங்குவதற்கும், மதிப்பெண் வாங்குவதற்குமே முக்கியத்துவம் தரும் கல்வியால், ஆராய்ச்சி மனநிலை பாதிக்கப்படுகிறது. இவ்வாறு, பல விஷயங்கள் அந்த அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது.