கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி

தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்தவிவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

2011-12-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 93 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஆணையிடப்பட்டது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தப்படும்.

புதிய பணியிடங்கள்:

2013-14-ம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 513 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிடத் தேர்வு வாரியத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், புதியதாகத் தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு 827 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, நிரப்பப்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...