பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில்,
ஜூன் 2014ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (18ம் தேதி) பிற்பகல் 2.00 மணி முதல் வரும் 22ம் தேதி வரை அலுவலக நாட்களில், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தேர்வுப்பிரிவில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நேரில் சென்று, மறுகூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன் லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மறுகூட்டல் கட்டணமாக, இரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.305, ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.
விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, தேர்வுத்துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறு கூட்டல் முடிவுகள் பற்றி அறிய இயலும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.