கனமழை எதிரொலி 3 மாடி கட்டிடத்தின் தரைத்தளம் பூமிக்குள் புதைந்தது

கனமழை காரணமாக 3 மாடி கட்டிடத்தின் தரைத்தளம் பூமிக்குள் புதைந்தது. நல்லவேளையாக குடியிருப்புவாசிகள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர் தப்பினார்கள்.

3 மாடி கட்டிடம்

மராட்டியத்தில் கடந்த
இரண்டு நாட்களாக பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இன்றும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், தானே, பிவண்டி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது பத்மா நகரில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் முதல் தளம்  அதிகாலை 4 மணியளவில் பயங்கர சத்தத்துடன் சரிந்து தரைத்தளம், பூமிக்குள் புதைந்தது.

இந்த சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடங்களில் வசிப்பவர்கள் பதறியடித்துபடி வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது, அங்கிருந்த 3 மாடி கட்டிடத்தின் தரைத்தளம் பூமிக்குள் புதைந்து இருந்தது. மற்ற 3 தளங்கள் மேலே அப்படியே இருந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியை துரிதமாக மேற்கொண்டனர்.

75 பேர் உயிர் தப்பினார்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிலாப் இடிந்து விழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அளவிற்கு வலுவிழந்த நிலையில் அந்த கட்டிடம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கட்டிடத்தில் வசித்து வந்த குடும்பங்களை சேர்ந்த 75 பேர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த வெளியேறி வேறு இடத்தில் தஞ்சம் புகுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் தானேயில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  காலை 6 மணி நிலவரப்படி தானே பகுதியில் 13.9 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

24 மணி நேரத்திற்கு கனமழை

மும்பையை பொறுத்தவரை  மதியம் வரையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. இந்த பகுதிகளில் வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி சென்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக இயங்கின.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை சாந்தாகுருசில் அதிகபட்சமாக 14.3 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கொலாபாவில் 8.6. செ.மீ. மீட்டர் மழை பதிவாகியது. மத்திய மராட்டிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று மும்பை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும். கடற்கரை பகுதியில் மேற்கில் இருந்து தென்மேற்கு பகுதி நோக்கி மணிக்கு 50 முதல் 55 கி.மீ. வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும். எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...