அன்னிய முதலீடு தேவையா ?????

நாம் ஒரு கம்பெனி நடத்தி வருகிறோம்.
எப்போது கடன் வாங்குவோம்?
தொழிலை நடத்த போதுமான நிதி நம்மிடம் இல்லாதபோது!
சரி, வேறு ஒருவரை எப்போது பங்குதாரராகச் சேர்த்துக்கொள்வோம்?
கடன் வாங்கினால்
திருப்பிச் செலுத்த முடியாது எனும்போது, லாபமோ, நஷ்டமோ, அதில் பங்கெடுக்கும் வகையில் ஒருவரைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்வோம்!
சரி, அந்நிய முதலீடு?
ஒரு தொழிலுக்கு அல்லது துறைக்கு போதுமான நிதி இல்லாதபோது அந்நிய முதலீடு தேவைப்படும். அல்லது ஒரு தொழில்நுட்பம் நம்மிடம் இல்லாதபோது, அத்தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்போம்!

இந்தியாவில் மிகப்பெரிய நிதிநிறுவனம் LIC!
ரூ.15 லட்சம் கோடிக்கு சொத்து!
இந்த ரூ.15 லட்சம் கோடியையும் திரட்ட அரசு செய்த முதலீடு வெறும் ரூ.5 கோடி!
எனவே நிதி தேவை என்ற கேள்வியே எழவில்லை!
உண்மையில் மக்களிடமிருந்து நீண்டகால சேமிப்பைத் திரட்டுவதுதான் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வேலை; அதை அரசு நிறுவனம் செய்யும்போது, அந்த நிதி அரசுக்குக் கிடைத்து மக்கள் நலப்பணிகளுக்குப் பயன்படுகிறது!
அவ்வாறு LIC குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.9,21,371 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.
அரசின் அய்ந்தாண்டுத் திட்டங்களுக்கு ரூ.32,14,994 கோடி உதவி செய்துள்ளது.

இந்த நிதியைத் தனியார் திரட்டியிருந்தால் தங்கள் கம்பெனி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அரசு உலக வங்கக் கடன் மாதிரி எதையாவது வாங்கியிருக்கும்... இல்லையா? அப்படியானால் அந்நியரையும், தனியாரையும் அனுமதித்ததே தவறல்லவா? இன்னும் அனுமதிப்பது சரியா?

சரி, தொழில்நுட்பம்?
இன்சூரன்ஸ்க்குத் தேவையான தனிப்பட்ட ஒரே தொழில்நுட்பம் Mortality Table எனப்படும் எதிர்பார்ப்பு வாழ்நாள் குறித்த புள்ளிவிபரம்தான்!
தெரிந்துகொள்ளுங்கள், இந்தியாவில் செயல்படும் 23 தனியார் ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களும் LICயின் Mortality Tableஅய்த்தான் பயன்படுத்திவருகின்றன. மேலும், இந்தியாவிலேயே  அதிகமாகவும், சிறப்பாகவும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் நிறுவனம் LICதான்!

இப்போது சொல்லுங்கள், இன்சூரன்ஸ் துறையில் தனியாரும் அந்நிய முதலீடும் எந்த வகையிலாவது அவசியமா? அதை 49% ஆக உயர்த்துவது, நம் பணத்தைத் திரட்டி நமக்குப் பணிகள் செய்ய உதவும் LICயைத்தானே பாதிக்கும்? அதனால் பாதிப்பு நமக்கு - அதாவது அனைத்துப் பொதுமக்களுக்கும்தானே? அப்படியானால் அனுமதிக்கலாமா?
LIC(D.Os)-HIKE GROUP

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...