5,565 அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்படும் -- சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள், ஆடும் நாற்காலிகள் உள்பட ரூ.55 கோடியே 65 லட்சம் மதிப்பில், 5,565 அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
5,565 அங்கன்வாடி மையங்கள்
இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனடைந்து வரும் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களை ‘‘எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்களாக’’ தரம் உயர்த்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதற்கட்டமாக, மொத்தமுள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில், 5,565 அங்கன்வாடி மையங்கள் 55 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம், 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள்.
இவ்வாறு தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ள அங்கன்வாடி மையங்களில் 100 சதுர அடி அளவில் கூடுதலாக ஓர் அறை கட்டுதல், குழந்தை நேய கழிப்பறைகளைக் கட்டுதல் மற்றும் சீரமைத்தல், தண்ணீர்த் தொட்டி அமைத்தல், கை கழுவும் தொட்டி, சமையலறைத் தொட்டி, காலணி அலமாரி, தண்ணீர் வடிகட்டி ஆகியவற்றை அமைத்தல், குழந்தைகளுக்கான வெளி விளையாட்டு சாதனங்கள், நாற்காலி மற்றும் மேசை, வாத்து மற்றும் குதிரை வடிவிலான ஆடும் நாற்காலி, புத்தகப் பை மற்றும் தண்ணீர் பாட்டில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குதல், அங்கன்வாடி மையங்களில் வெள்ளை அடித்து சுவர் ஓவியம் வரைதல் மற்றும் சிறிய பழுதுகளை நீக்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மழலையர் பராமரிப்பகம்
அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடிப் பயனாளிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து, சுகாதார சேவைகள், தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலின் அளவினை மின்னணு வெப்பமானி மூலம் அறிந்து, பதிவு செய்து, அதற்கேற்றாற் போல் மருந்துகளை வழங்கினால் நலம் பயக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, மின்னணு வெப்பமானி, காயத்திற்கு கட்டும் துணியை வெட்டும் கத்திரிக்கோல், சுத்தப்படுத்தப்பட்ட காயத்திற்கு கட்டும் துணி, நுண் துளையிடப்பட்ட ஒட்டும் துணி, காயங்களுக்கான ஒட்டுப்பசைத் துணி மற்றும் முதலுதவி கையேடு ஆகியன அடங்கிய முதலுதவிப் பெட்டிகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பணிக்குச் செல்லும் தாய்மார்கள், 5 வயது வரையுள்ள தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்வதால், அக்குழந்தைகளுக்கு பராமரிப்பகங்களை அமைப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களை ‘‘மழலையர் பராமரிப்பகங்களாக’’ தரம் உயர்த்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் மொத்தம் 211 அங்கன்வாடி மையங்கள் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்.
சிற்றுண்டி
இந்த ‘‘மழலையர் பராமரிப்பகங்கள்’’ முதற்கட்டமாக தேவைப்படும் இடங்களில் வாடகைக் கட்டிடங்களில் முதன்மை அங்கன்வாடி மையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதன் மூலம், 211 அங்கன்வாடி மையங்களில் ஒரு மையத்திற்கு குறைந்த பட்சமாக 15 குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 3,165 குழந்தைகள் பயனடைவர். மேலும், இக்குழந்தைகளைக் கவனிக்கத் தேவைப்படும் விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தொட்டில்கள், சுத்தம் செய்யத் தேவையான பொருட்கள், கூடுதலான படுக்கைகள், போர்வைகள், குழந்தைகளுக்கான அடையாள அட்டைகள் ஆகியன வழங்கப்படும்.
இதுதவிர, மழலையர் பராமரிப்பகங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இணை உணவு மற்றும் சத்துணவுடன், ஒரு நாளைக்கு, ஒரு குழந்தைக்கு 6 ரூபாய் செலவில் வருடத்தில் 300 நாட்களுக்கு, காலை உணவு, சிறு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...