திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறையில் பள்ளி விடுதிகள் தொடர்பான கோப்புகள் மாயமாகியுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தவிர, தனியார் பள்ளிகள் சார்பிலும் விடுதிகள் நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் ம.மூ.கோவிலூரில் உள்ள தனியார் பள்ளி விடுதி மாணவர், சக மாணவரால் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த பள்ளி விடுதி மூடப்பட்டது. சமீபத்தில், திண்டுக்கல் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில் விடுதிக்கு அங்கீகாரம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் அனைத்தும் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்பதை ஆய்வுசெய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் செயல்படும் விடுதிகளை ஆய்வுசெய்ய திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலருக்கு கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார். ஆனால் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளி விடுதிகளுக்கான கோப்புகள் எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதன்மை கல்வி அலுவலர், விடுதிகளின் விபரங்களை சேகரித்து கோப்புகளை புதிதாக தயாரிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) கலையரசி கூறுகையில், "பள்ளி விடுதிகளுக்கான விபரங்களை உடனடியாக சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து அரசு விதிமுறைப்படி விடுதிகள் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளோம்" என்றார்.