ஒரு மாதத்திற்கு ரூ.7 லட்சம்

அங்கன்வாடி மையங்களுக்கு காய், கனிகள் வாங்க, சமூக நலத்துறை ஐந்து மாதங்களாக பணம் ஒதுக்கவில்லை. இதனால் பணியாளர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து, காய், கனிகள் வாங்க செலவிட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவின்றி ஆரோக்கியமாக வளர, கருவுற்ற தாய்மார்களுக்கு மூன்று மாதங்களில் இருந்து சத்துமாவும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஐந்து வயது வரை சத்து மாவு, இணை உணவு வழங்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு ரூ.7 லட்சம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,351 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், 2,155 முதன்மை மையங்களும், 196 குறு மையங்களும் செயல்படுகின்றன. இவற்றில் 50,124 குழந்தைகள் படிக்கின்றனர். மையங்களில் பயிலும் குழந்தை களுக்கு, தினசரி உணவுக்காக ஒரு குழந்தைக்கு காய், கனி செலவினத்திற்காக 25 பைசா, மளிகை பொருட்கள் வாங்க 12 பைசா, விறகுக்கு 19 பைசா வீதம் வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி குழந்தைகள் வருகைக்கேற்ப செலவு செய்யப்படுகிறது. தினசரி ஒரு குழந்தைக்கு 56 பைசா வீதம், மாவட்டத்தில் உள்ள 50,124 குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 28,069 ரூபாய் என, ஒரு மாதத்திற்கு 7,29,794 ரூபாய் செலவாகிறது.

இதேபோன்று, அரிசி 80 கிராம், துவரம் பருப்பு 10 கிராம், எண்ணெய் 2 மி.லி., கடலை 20 கிராம் என வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக காய், கனிகள் வாங்குவதற்கு பணம் வழங்காததால், பணியாளர்கள் அவர்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை இதற்காக செலவு செய்து வருகின்றனர். மாத ஊதியமாக குறு மைய பணியாளர்கள் 3,500ம், முதன்மை மைய பணியாளர்கள் 5,500ம் பெறுகின்றனர்.

குறைந்த ஊதியம் பெறும் இவர்கள், தம் சம்பளத்திலிருந்து தினசரி காய், கனி வாங்க செலவிடுகின்றனர். இதனால், அவர்கள் குடும்ப செலவு செய்ய முடியாமல் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான செலவினத்திற்காக, இந்த குறைந்தபட்ச தொகையை கூட ஐந்து மாதங்களாக வழங்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.

சம்பளத்தில் இருந்து...

இதுகுறித்து, பணியாளர்கள் சிலர் கூறுகையில், "குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் நாங்கள் எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பெரும் தொகையை மையத்திற்கு, காய், கனி வாங்க செலவு செய்கிறோம். இதனால், குடும்ப செலவிற்கு சிரமப்படுகிறோம். எனவே, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. துறையிடம் நிதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...