ராகிங்கை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை

ராகிங்கை கட்டுப்படுத்த, கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள ராகிங் தடுப்புக் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு கல்லுாரிகள், உதவிபெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என அனைத்து
கல்லுாரிகளிலும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் ராகிங் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத்துக்கு தெரியாமல் சில கல்லுாரிகளில் வளாகத்திலும், வெளியிலும் ராகிங் கொடுமை நடந்து கொண்டுதான் உள்ளன.

ராகிங் பிரச்னையால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் உருவாகும் முன்விரோதம் காரணமாக கொலைகள் நடப்பதும் தொடர்கதையாகவே உள்ளது. ராகிங் கொடுமை நடக்கும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல், புகார் பெட்டி வைத்தல், உரிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்களை கல்லுாரி அறிவிப்பு பலகையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ராகிங்கை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராகிங்கை தடுக்கும் வகையில், முதல்வர், மூத்த பேராசிரியர்கள் அடங்கிய ராகிங் தடுப்பு குழு செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இக்குழுவில் புகார் அளிக்க, கல்லுாரி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லுாரி முதல்வர் குமரேசனிடம் கேட்டபோது, "கல்லுாரியில் செயல்படும் ராகிங் தடுப்பு குழுவில் மாணவர்கள் புகார் அளிக்கலாம். மேலும், இக்குழு ராகிங் நடக்கிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். புகார் குறித்து ராகிங் தடுப்புக் குழு விசாரணை நடத்தும். முதலில், முன்னறிவிப்பின்றி மாணவர்கள் கல்லுாரியிலிருந்து நீக்கப்படுவர்.

பின், போலீஸ் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இவர்களுக்கு இரண்டாண்டு வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. வேறு எந்த கல்லுாரியிலும் சேர முடியாது. முதல்வர் அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில், மாணவர்கள் ராகிங் குறித்து புகார் அளிக்கலாம்" என்றார்.

யு.ஜி.சி., ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன்: டில்லி யு.ஜி.சி., சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் 1800-180-5522 என்ற ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த இலவச டோல் எண்ணில் மாணவர்கள் ராகிங் குறித்து புகார் அளிக்கலாம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த ஹெலப் லைன் செயல்படுகிறது. இம்மையத்திலிருந்து தொடர்புடைய கல்லுாரி, பல்கலை துணைவேந்தர், போலீஸ் ஸ்டேஷன் உயர் அதிகாரி, எஸ்.பி., ஆகியோருக்கு மாணவனின் புகார் அனுப்பப்படுகிறது. எனவே, மாணவர்கள் இந்த எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...