சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

 கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை
யொட்டி சிறந்த அரசு பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர் ஒரு மாவட்டத்துக்கு 4 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

2014-15 ம் கல்வியாண்டில் பரிசு வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித் துறைக்கு ரூ.24 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம் அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...