தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு: மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு

 தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தேதி வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி
நிறுவனத்தின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை என்பதால் ஏராளமான மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் கடந்த 12ம் தேதி வரை நடந்தது. ஆனால் விண்ணப்பித்த மாணவர்களில் சிலர் கவுன்சலிங்கில் பங்கேற்காததால், கவுன்சலிங் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, "வரும் 18ம் தேதி அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கவுன்சலிங் நடக்கும்" என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...