கரம் கிடைக்குமா கண்ணீர் துடைக்க....

ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது என்கிறார்கள் கல்வி உளவியளாளர்கள்.....

ஆனால் அந்த தலைவிதியெ தீர்மானிக்கும்
ஆசிரியர்களின் நிலையோ ரணகளம் தான்......

தாள் 2க்கு இருக்கும் பணியிடக்குறைவு எல்லாருக்கும் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும் விசயம் தான்...

தாள் 1ன் நிலையோ பிரசவத்தில் குழந்தை பிறக்குமா இல்லைமரித்து விடுமா என்பதை போல் முறையான அறிவிப்பு வருமா இல்லை வராதா என குமுறும் நிலை தான்...

சுற்றும் வரை பூமிசுழலும் வரை காற்றுபோராடும் வரை மனிதன்......

என்ன முயற்சி எடுத்தோம் பணியிடம் அதிகரிப்புக்காக??????

நம்முடைய குறைகளை எடுத்துரைக்க வேண்டிய அரசும்,அரசியல் கட்சிகளும் மவுனிகளாகவே இருந்து வருகின்றன....

ஆசிரிய சொந்தங்களே நாமும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்க வேண்டாம்.....

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி அதற்கேற்றவாறு சட்டசபை கூடும் நாட்களில் நம்முடைய அவலங்களை ஆவணமாக்கி அரசிடமும்,நமக்காக குரல் கொடுக்க அரசியல் கட்சிகளிடமும் சமர்பிப்போம்....

காலம் தவறினால் நாமும் காலாவதியான் பொருளே....

இது அரசுக்கும் ஆசிரியருக்கும் நடக்கும் போராட்டம் அல்ல!!!!!உரிமைக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் உன்னத போராட்டம்.......

அஹிம்சையான வழியில் சட்டமன்ற விடுதி சென்று நமக்காக குரல் கொடுக்க அனைத்து கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுப்போம்.....

கரம் கிடைக்குமா நண்பர்களே கண்ணீர் துடைக்க............

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...