கேள்விக்குறியான மாணவர்களின் படிப்பு

கடந்தாண்டுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் எனக்கோரி கல்லூரி மாணவர்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

ஈரோடு, ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் படிக்கின்றனர். நேற்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈரோடு கலெக்டர் சண்முகத்திடம் மனு வழங்கி கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் அரசின் கல்வி உதவித் தொகையை கல்வி ஆண்டின் இறுதியில் அதாவது மார்ச் மாதம் பெற்று விடுவோம். கடந்த கல்வி ஆண்டு இறுதியில் தேர்தல் காரணமாக கல்வி உதவித் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு பின் நிலுவையில் உள்ள தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு விட்டது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றவர்கள்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2,600 ரூபாய், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 5,000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கடந்தாண்டு இறுதியில் வழங்கப்பட்டு இருக்க வேண்டிய இத்தொகை 300க்கும் மேற்பட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

பிற கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வங்கி கணக்கை துவங்கி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

கல்லூரியில் கேட்டால் விரைவில் வங்கி கணக்கில் தொகை சேர்க்கப்படும் என்கின்றனர். வங்கியில் கேட்டால் "தெரியாது" என்ற பதிலை கூறுகின்றனர். கல்லூரியில் பெரும்பாலும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களே பயில்கின்றனர். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தோருக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை பெறும் உதவியாக உள்ளது.

கல்வி உதவித் தொகை நிலுவையில் இருப்பதால் எங்கள் கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தொகை கிடைக்கப் பெறாவிடில் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்படும். கடந்தாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத நிலையில், இந்தாண்டுக்கான உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்று உள்ளனர். இதனால் கடந்தாண்டு கல்வி உதவி தொகை இனியும் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே கடந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதே நிலை பல கல்லூரிகளில் உள்ளதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...