பி.இ., கலந்தாய்வு இன்று துவக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர்
சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.புதிய பொறியியல் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்க, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) அவகாசம் கோரியதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுப் பிரிவினருக்கான, பி.இ., கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று காலை துவங்குகிறது. ஆக., 4ம் தேதி வரை, 28 நாட்கள்கலந்தாய்வு நடக்கிறது. தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 9ம் தேதி துவங்குகிறது.'கலந்தாய்வில் பங்கேற்போருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு, அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.அழைப்பு கடிதம் கிடைக்காத மாணவர்கள், www.annauniv.edu என்ற இணையதளத்தில், விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...