ரயில்வே நவீனமயத்திற்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

பார்லிமென்டில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள
ரயில்வே பட்ஜெட்டில், ரயில் விபத்துகளை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பிற்காகவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின், புதிய அரசின், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், பார்லிமென்டில் இன்று துவங்குகிறது. நாளை, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, 2014 - 15ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.ஏற்கனவே, பயணிகள் ரயில், சரக்கு ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை தாக்கல் செய்யவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், சில முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரயில் கட்டண உயர்வால், அதிருப்தியில் உள்ள பொதுமக்களை, சமாதானம் செய்யும் வகையில், ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

விபத்து தடுப்பு:

இதுகுறித்து, ரயில்வே அமைச்சக வட்டாரங்கள்கூறியுள்ளதாவது:ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள், ரயில் இன்ஜின்களில் ஏற்படும் திடீர் கோளாறுகளால், பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்கவும், கோளாறு களை முன்கூட்டியே கண்டறி யும் வகையிலும், ரயில் தண்ட வாளங்களில், சிறப்பு 'எக்ஸ் ரே' உபகரணங்களை பொருத்ததிட்டமிடப்பட்டு உள்ளது.அடிக்கடி விபத்து நடக்கும் வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்ள தண்ட வாளங்களில் இந்த, 'எக்ஸ் ரே' உபகரணங்கள் பொறுத்தப்படும். இவை, ரயில்வே தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் திடீர் கோளாறுகளை, உடனுக்குடன் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும்.பெரும்பாலான ரயில் விபத்துகள், ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் நடைபெறுகின்றன. மொத்த விபத்துகளில், 40 சதவீதம் இங்கு தான் நடக்கின்றன. நாடு முழுவதும், 12 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.

விசேஷ கருவிகள்:

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் ரயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், வெப்பநிலை மாற்றம், பனிப்பொழிவு போன்றவற்றை கண்டறிந்து, ரயில்வே தடங்களில் ஏற்படும் மாற்றங்களை, முன்கூட்டியே தெரிவிக்கும் விசேஷ கருவிகள் பொருத்தப்படும்.ரயில்வே காவல் படை, நவீனமயமாக்கப்படும். ரயில்வே காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, அதிநவீன பயிற்சி மையம் துவங்கப்படும்.இவ்வாறு, ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...