பள்ளியில் வைக்கப்பட்டிருந்த லேப் டாப்புகளை திருடியதாக அதே பள்ளியை சேர்ந்த ஐந்து மாணவர்களை போலீசார் கைது
செய்தனர்.
தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம் கடமலைக்குன்று அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலையில்லா லேப்டாப்புகள் நேற்று முன்தினம் வந்தது. இவற்றை பள்ளி தாளாளர் அறையில் வைத்திருந்தனர். லேப்டாப்புகள் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பள்ளியின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த இரண்டு பேர் அங்கு அடுக்கி வைத்திருந்த 22 லேப்டாப்புகளை எடுத்து சென்றனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தக்கலை போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் அதே பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 22 லேப்டாப்களையும் போலீசார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜெனி 16, மேக்ளின்பால் 16, ஆன்டோமெல்டின் 16, ஜெனில் 17, பெனிக்ஸ் 15 ஆகிய ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.