துணை கலெக்டர் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 79 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு வரும் 20ம் தேதி நடக்கிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
துணை கலெக்டர் - 3, டி.எஸ்.பி. - 33, வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் - 33 மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் - 10 என 79 காலி பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடக்கிறது.
வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
உரிய முறையில் விண்ணப்பித்தும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், உரிய விவரங்களை contacttnpsc.@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதிக வயது பிரச்னை காரணமாக 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.