மகளிர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக நடத்தப்படும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மகளிர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மகளிர் உண்டு உறைவிடப் பள்ளி, 11 முதல் 14 வயது வரை உள்ள
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்காக மட்டும் செயல்படும் பள்ளியாகும். இப்பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், தூ.நா.பாளையம், நம்பியூர், சத்தி மற்றும் தாளவாடி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் பயிலும் மாணவியருக்கு உணவு, உடை, உறைவிடம் உள்பட தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா நலத் திட்டங்களும் கிடைக்கும். இப்பள்ளியில் மாணவியர் சேர்க்கை தொடர்பாக அனைத்து மலைப் பகுதிகளிலும் மாணவியர் சேர்க்கை பிரசாரம் செய்யப்பபட்டு வருகிறது. அந்தியூர், சத்தி, தாளவாடி மற்றும் தூ.நா.பாளையம் மலைப் பகுதி பள்ளிகளில் சேர்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது. தீவிர மாணவியர் சேர்க்கை பிரசாரத்தை தொடர்ந்து இதுவரை அந்தியூர் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 59-ஆகவும், சத்தி பள்ளியில் 52, தாளவாடி பள்ளியில் 57, தூ.நா.பாளையம் பள்ளியில் 90-ஆகவும் அதிகரித்துள்ளது. இப்பள்ளிகளில் புதிதாக 40-க்கும் மேற்பட்ட மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவிகள் சேர்க்கப்படவும் உள்ளனர். சத்தி, தாளவாடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பழங்குடியினர் மக்கள் நலச் சங்க மாவட்டத் தலைவர் கே.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் உறுதுணையாக இருந்ததாக அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...