கள்ளக்குறிச்சி அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு மாணவர்கள் மயங்கிய சம்பவம் தொடர்பாக, சத்துணவு பொறுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அழுகல் முட்டையால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. அதையொட்டி, மதிய உணவு மற்றும் முட்டை ஆகியன சோதனைக்காக விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கலெக்டர் சம்பத் அறிவுரையின்படி, சின்னசேலம் பி.டி.ஓ., ராஜேந்திரன், பள்ளி சத்துணவு பொறுப்பாளர் மூக்காயியை சஸ்பெண்ட் செய்தார்et