பள்ளியின் குறிக்கோள்களை அடைய முக்கிய சக்தியாக விளங்குபவர்கள் தலைமை

பள்ளியின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் அடைய மிக முக்கியமான சக்தியாக விளங்குபவர்கள் தலைமை ஆசியர்கள் என, விருதுநகர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சி.டென்னிஸ் தெரிவித்தார்.

ராஜபாளையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஒன்றியங்களை சேர்ந்த நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான நிர்வாக திறன் பயிற்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணி பட்டி நகராட்சி நடுநிலைபள்ளியில் நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்த அவர், " ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்த நாட்டின் குடிமக்களை பொருத்து அமையும். சிறந்த குடிமக்களை உருவாக்குவது கல்வியை சார்ந்தது. கல்வியை திறம்பட கற்பித்து, மாணவர் அடைவு திறன் மேம்பாட்டிற்கு தலைமை ஆசிரியர் ஆற்றும் பணி இன்றியமையாதது.

பள்ளியின் செயல்பாட்டில், தலைமை ஆசிரியரின் பங்கு மிக இன்றியமையாதது. பள்ளிகள் அதனுடைய நோக்கங்களையும், குறிக்கோளையும் அடைய மிக முக்கிய சக்தியாக விளங்குபவர் தலைமை ஆசிரியர்தான்" என்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜாண் சேவியர்ராஜ், முன்னிலை வகித்தனர்.

இரு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில், பயிற்சியாளர்களாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி, ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் வெங்கடசாமி, விரிவுரையாளர் மகாலிங்கம், ஆசிரிய பயிற்றுனர் ராஜாரகீம் பயிற்சியளிக்கின்றனர்.eh 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...