ஓசூரில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தரமற்ற உணவு தயாரித்த சத்துணவு
அமைப்பாளர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஓசூரை அடுத்த ஒன்னல்வாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஓம்காரப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 51 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவியர் 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறுகையில், "இங்குள்ள பள்ளி சமையல் அறை சுத்தமாக இல்லை; தரமான உணவு சமைக்கப்படுவதில்லை" என்றனர். இதையடுத்து பள்ளி சத்துணவு அமைப்பாளர் சுலோக்சனா, பணியாளர்கள் முனிரத்தினம்மா, ஸ்ரீலலிதா ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்