ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான இலவச கணினி படிப்பில் சேர இம்மாதம் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி மொஹந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொஹந்தி செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் மத்திய அரசின் தொழிலாளர் வேலைவாய்ப்பு பிரிவின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் செயல்படுகிறது.
இந்த மையம் ஜீரோ லெவல் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மெயின்டனன்ஸ் என்ற ஓராண்டு கால பயிற்சியை ஆக. 1 முதல் நடத்த உள்ளது. வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள பிளஸ் 2 (அறிவியல்) மற்றும் ஐ.டி.ஐ. எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் படித்தோர், அறிவியல் பாடம் எடுத்து படிக்காதோர் சேரலாம்.
இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ளோர் இம்மாதம் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி மையத்தில் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும். இதற்கான நேர்காணல் இம்மாதம் 25, 28, 30ம் தேதிகளில் நடக்கும். நேர்காணல் வருவோருக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படாது.