கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் தீர்ப்பு ஏமாற்றமும், மனவேதனையும் அளிக்கிறது

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. 10 ஆண்டுகள் கழித்து தங்களுக்கு உரிய தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோர்ட் வளாகத்தில் காத்திருந்த பெற்றோர், 11 பேர் விடுதலை என்ற தகவல் அறிந்து மிகவும் ஆவேசமாக காணப்பட்டனர்.
கோர்ட் தங்களுக்கு உரிய நியாயம் வழங்காவிட்டால், தாங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம் என அங்கிருந்த மூதாட்டி ஒருவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து தொடர்பான தீர்ப்பு மனவேதனையையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக, பலியான குழந்தைகளின் பெற்றோர் ஆதங்கம் தெரிவித்தனர். கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்து தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 10 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தீர்ப்பு குறித்து பலியான குழந்தைகளின் பெற்றோர்களான அமுதா, மாலா மற்றும் சூரிய கலா ஆகியோர் கூறுகையில், பள்ளி தீவிபத்துக்கு பள்ளி நிர்வாகம், கல்வித்துறை மற்றும் நகராட்சித் துறையினரின் அலட்சியப்போக்கே காரணம். தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 11 பேரை விடுவித்து கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, ஏமாற்றமும் மனவேதனையும் அளிப்பதாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பழனிச்சாமியின் மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...