யு.பி.எஸ்.சி. தேர்வில் மொழி பாகுபாட்டை எதிர்த்தும், திறனறி தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
அப்போது மேல்–சபையில் பதிலளித்து பேசிய பணியாளர்
நலன் இணை மந்திரி ஜிதேந்திர சிங், ‘மாணவர்களுக்கு மொழி அடிப்படையில் எந்த அநீதியும் இழைக்க விடமாட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் அளிக்குமாறு கேட்டுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.
திறனறி தேர்வுக்கு யு.பி.எஸ்.சி. நுழைவுச்சீட்டு அனுப்பியதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், யு.பி.எஸ்.சி. தனது வழக்கமான காலண்டர் அடிப்படையில் இந்த நுழைவுச்சீட்டை அனுப்பியதாக கூறினார்.
முன்னதாக, மேல்–சபையில் கேள்வி நேரத்தின் போது யு.பி.எஸ்.சி. விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சிகள், இது குறித்து பிரதமரோ, அவைத்தலைவரோ தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டாலும், சபை ஒத்திவைக்கும் அளவுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.