சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், புதிய தலைமை நீதிபதியாக கவர்னர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்.
இதற்காக நேற்று
பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஐகோர்ட்டு பதிவாளர், ஐகோர்ட்டு அதிகாரிகள், வக்கீல்கள் வரவேற்றனர்.
அப்போது நிருபர்களிடம் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, ‘‘சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’’ என்றார்.
