நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைவாக தயாரித்து தரும்படி நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு மத்திய குடிநீர்த்துறை கடிதம் எழுதி இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலின்போது, பா.ஜனதா தனது தேர்தல்
அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்போம் என்று அறிவித்து இருந்தது. பல்வேறு மாநிலங்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இதனை தனது லட்சிய வாக்குறுதியாக பா.ஜனதா அறிவித்தது.
நதிகளை இணைக்க முயற்சி
இதன், முதல் கட்டமாக அருகருகே உள்ள மாநில நதிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி தலைமையிலான குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து, மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டுத்துறை மந்திரி உமாபாரதிக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ஜூலை 15–ந் தேதியிட்ட அந்த கடிதத்தின் நகல் ஒன்று, பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வறட்சி அதிகரிப்பு
தற்போது சில மாநிலங்களில் தண்ணீர் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குடிநீர் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் மிகக் கடுமையாக காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம், நீர்த்தேக்கங்கள், அணைகள் போன்றவற்றின் நீர்ஆதாரம் வேகமாக குறைந்து கொண்டே போவதுதான் இதற்கான முக்கிய காரணங்கள். இந்த மாநிலங்களில் கடும் வறட்சி போன்றதொரு நிலை உருவாகி இருக்கிறது.
எனவே, எதிர்காலத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நதிகளை இணைக்கும் வகையிலான திட்டம் நமக்கு தேவை. மேலும், நாட்டில் உள்ள நீர்பாதை முறைகளை சீரமைத்தும், கடலில் நீர் வீணாக கலப்பதை தடுத்து சேமிப்பதன் மூலமும் நீர் மட்டத்தை மேற்பரப்புக்கு கொண்டு வர இயலும்.
திட்டத்தை தயாரித்து தாருங்கள்
குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களின் அதிகமான நீர் தேவை குறித்து அடிக்கடி கோரிக்கை விடுத்து வருவது மத்திய அரசை கவலை கொள்ளச் செய்து உள்ளது. நிலத்தடி நீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே போவது குறித்து இந்த மாநிலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக இந்த மாநிலங்கள் நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. எனவே பல்வேறு மாநிலங்களின் நீர் ஆதாரம் மற்றும் குடிநீர் தேவையைக் கருதி நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை தங்களது அமைச்சகம் விரைவாக தயாரித்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
கேரள எம்.பி. எதிர்ப்பு
அதே நேரம் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுபற்றி புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் கூறுகையில், ‘‘நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவிக்காதவரை அதனை அனுமதிக்கக் கூடாது. கேரளாவில் 41 ஆறுகள் ஓடுகின்றன. அவை முடிவில் அரேபிய கடலிலில் கலக்கின்றன. அதனால்தான் கேரளாவில் உள்ள நிலங்கள் வளமையாக இருக்கின்றன. இந்த நதிகளை தமிழ்நாட்டுக்கோ, அல்லது வேறு எங்கோ திருப்பிவிட்டால் அதன் சுற்றுச்சூழலும், பசுமையும் பாதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.