நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலி தமிழ்நாட்டில் 52 பணியிடம் காலியாக உள்ளது

நாடு முழுவதும் மொத்தம் 4,728 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளன. ஆனால் இதில் தற்போது 3,798 பேர் தான் அந்த பணியில் உள்ளனர். இதனால் நாடுமுழுவதும் 930
ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 105 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 263 ஐ.பி.எஸ். பணியிடங்களில் 52 பணி இடங்கள் காலியாக உள்ளன.

மேற்கு வங்காளத்தில் 96 இடங்களும், ஒடிசாவில் 83 இடங்களும், அருணாசலபிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 75 இடங்களும் காலியாக உள்ளன. ஆந்திராவில் 51 இடங்களும், மராட்டியத்தில் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுபற்றி மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...