மாணவ-மாணவிகளிடையே ராக்கிங்கை தடுக்க கமிட்டி அமைக்கவேண்டும் என்று அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அண்ணாபல்கலைக்கழகம் அறிக்கை அனுப்பி உள்ளது.
ராக்கிங்-கல்லூரியில் இருந்து நீக்கம்
கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் முதலில் படிக்க சேர்ந்ததும் அவர்களை அறிமுகப்படுத்தி நண்பர்களாக்குவதற்காக தொடங்கப்பட்ட
ராக் கிங், காலப்போக்கில் உயிர்க ளை குடிக்கும் சம்பவமாக மாறி உள்ளது. ராக்கிங் கொடுமை காரணமாக பலர் தற்கொலைதான் செய்துள்ளனர். இந்த நிலைவரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சுப்ரீம்கோர்ட்டும், பல்கலைக் கழக மானியக்குழுவும் சில விதிமுறைகளை கொண்டு வந்தது. அதன்படி ராக்கிங்கில் ஈடுபடும் மாணவரின் சேர்க்கையை ரத்து செய்து கல்லூரியில் இருந்து நீக்கவேண்டும். ராக்கிங்கில் ஈடுபட்டதாக புகார் வந்தால் அவர் ஏற்கனவே தேர்வு எழுதி இருந்தால் அவரது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யக்கூடாது. அவரை விடுதியில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும். ராக்கிங் உறுதிபடுத்தப்பட்டால் சிறைத்தண்டணை உண்டு. ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்க விதி உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் சேரும்போது ராக்கிங்கில் ஈடுபடமாட்டடேன் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் உடனடியாக கல்லூரியில்இருந்து நீக்கி விடுவதற்கு சம்மதிப்பதாகவும் கூறி மாணவர்கள் உறுதி மொழி கடிதம் எழுதி கல்லூரி கொடுக்கவேண்டும். பெற்றோரும் தனது மகன் அல்லது மகள் ராக்கிங்கில் ஈடுபடமாட்டான் என்று எழுதி கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. கமிட்டி அமைக்க வேண்டும் இப்படிப்பட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் ராக்கிங் குறைந்துள்ளது. இருப்பினும் ராக்கிங் நடக்காமல் தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 3 மாதத்திற்கு ஒரு அறிக்கை ராக்கிங் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக கல்லூரி முதல்வர் அல்லது கமிட்டியில் உள்ளவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்க வேண்டிய போன் நம்பர் அந்தந்த கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும். மேலும் 3 மாதத்திற்கு ஒரு முறை ராக்கிங் நடந்ததா? என்பது குறித்து என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். ஆகஸ்டு 1-ந்தேதி வகுப்புகள் திறப்பு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் மாணவர்களை என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்த்து வருகிறது. ஆகஸ்டு 1-ந்தேதி கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதையொட்டி சீனியர் மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அண்ணாபல்கலைக்கழகம் ராக்கிங்கை கமிட்டி அமைக்கும்படி கடிதம் அனுப்பி உள்ளது.