தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப்பயிற்சி மாணவர்
சேர்க்கைக்கான கவுன்சலிங் நாளை துவங்குகிறது" என நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக ஒற்றைச் சாளர முறையில் நாளை (7ம் தேதி) முதல் 15ம் தேதி வரை ஆன்-லைன் கவுன்சலிங் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடக்கிறது.
பட்டயப்படிப்புக்காக விண்ணப்பித்த மாணவர்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கான கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிறுவனத்தின் மூலமும் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் கவுன்சலிங்கில் உரிய தேதியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.