பள்ளி வளாகம் என்றாலே துாய்மையாகவும்; அழகிய வர்ணம் பூசப்பட்ட கட்டடங்களும் காணப்படும் என்ற எண்ணத்தில் பொள்ளாச்சி அருகே ஒரு பள்ளிக்குள் நுழைபவர்களுக்கு அங்கு பார்த்த காட்சிகள் அதிர்ச்சியினைத்தான் ஏற்படுத்துகிறது.
பொள்ளாச்சி
அருகேயுள்ள வரதனுார் ஊராட்சிக்குட்பட்டது செங்குட்டுப்பாளையம். இப்பகுதி மாணவர்களும் கல்வி அறிவு பெறுவதற்காக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. உயர்நிலைப் பள்ளிக்காக இப்பள்ளி மாணவர்கள் வெளியூர் சென்று வந்த நிலை இருந்தது. இதனையடுத்து, இப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு, 250 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கிராமப்புறத்தில் போதிய அடிப்படை வசதிகளின்றி செயல்படும் இப்பள்ளி கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது மட்டுமே மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. மற்றபடி எதையும் பாராட்டும் வகையில் இல்லை.
இடிந்த கட்டடம்: பள்ளி வளாகத்தில், மாணவர்கள் அமர்ந்து படிக்க வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு சில ஆண்டிற்கு முன் அங்கிருந்த ஒரு கட்டடத்தின் மேற்கூரையில் மரம் விழுந்து சிதிலமடைந்தது. இக்கட்டடம் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலைக்கு மாறியுள்ளது. இதுபோன்று மாணவர்கள் அமர்ந்து படிக்கும் கட்டடமும் போதிய பராமரிப்பின்றி உள்ளது. கடந்த 2003-04ம் ஆண்டு 4.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடத்திலும் மழை நீர் தேங்குவதால், கட்டடம் பலமின்றி காட்சியளிக்கிறது.
கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு கட்டடமும் பழுதடைந்துள்ளது. இந்த கட்டடத்தின் ஜன்னல் கதவுகள் பெயர்ந்திருப்பதால், மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. பாழடைந்த கட்டடங்களில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் உயிர் பயத்துடன் படிக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
திறந்தே கிடக்கும் பள்ளி கேட்: செங்குட்டுப்பாளையம் பள்ளி வளாக கேட், எப்போதும் திறந்தே கிடக்கிறது. இதுமட்டுமின்றி, பள்ளியின் மற்றொரு கேட்டும் பூட்டப்படாமல் உள்ளது. இதனால், கேட் இருந்தும் பூட்டப்படாமல் இருப்பதால், யார் வேண்டுமென்றாலும் உள்ளே வந்து செல்லும் நிலை நீடிக்கிறது. பள்ளியின் சுற்றுச்சுவரும் முழுமையாக இல்லாததால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பள்ளியின் கேட் திறந்தே கிடப்பதால், சமூக விரோதிகள் உள்ளே வந்து மதுபானம் குடித்தல் போன்ற சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மதுபானம் தலைக்கேறியதும், சிலர் பாட்டில்களை அப்படியே உடைத்து வீசி விட்டு செல்வதுடன், பள்ளியின் குடிநீர் தொட்டி குழாய்களை உடைப்பது போன்ற பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நவீன கழிப்பிடம்: மாணவ, மாணவியருக்காக கழிப்பிடத்தை பார்த்தால் ஒரு கனம் அதிர்ச்சியுடன்தான் திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. மாணவியருக்காக கட்டப்பட்ட கழிப்பிடத்தின் முன் முட்செடிகள் வளர்ந்து, பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதுமட்டுமின்றி, மாணவர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சுகாதாரமின்றி காணப்படுகிறது.
சுவர்கள் பெயர்ந்து, கதவுகள் உடைந்தும் பார்ப்பதற்கே அலங்கோலமாக காட்சியளிக்கும் கழிப்பிடத்திற்குள் சென்றால், மூக்கை பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. கழிப்பிடத்தை பயன்படுத்தும் மாணவர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது.
தொட்டா ஷாக் அடிக்கும்: பள்ளிக்கு அருகேயுள்ள ஊராட்சி கழிப்பிடத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. மரத்தையொட்டி வரும் மின்சார வயரை எதிர்பாரத விதமாக மாணவர்கள் தொட்டால் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்வித்துறைக்காக நிதி அதிகளவு ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இப்பள்ளியில் எதுவும் இல்லாதது பெற்றோரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்துகிறது. அரசு இப்பள்ளியில் போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.