மடத்துக்குளம் பகுதி பள்ளிகள் அனைத்திலும் மாணவர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மாணவர் காப்பீட்டுத்திட்டம் உள்ளது. இதில் ஆண்டு தவணையாக ஒரு மாணவர் ஐம்பது ரூபாய் மட்டும் செலுத்தினால், இந்த தொகைக்கு மாணவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் விபத்துக் காப்பீடு செய்யப்படுகிறது. இதில் பிரிமியம் ஆண்டாக ஆகஸ்ட்-செப்டம்பர் உள்ளது.
தற்போது, மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் வெங்கிட கிருஷ்ணா மேல்நிலைபள்ளியில் படிக்கும் 2,100 மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய நாட்களில், கல்வி பயில கட்டாயம் பணம் தேவையாக உள்ளது. தேவையான பொருளாதார வசதி இன்றி பல மாணவர்கள், தங்கள் படிப்பை பாதியில் விட்டு,வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. தந்தை இறந்து விட்டால், குடும்ப பாரத்தை படிக்கும் மாணவர்கள் சுமக்கும் அவலமும் உள்ளது. இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இந்த மாணவர்கள் காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகம் செய்து அதில் அனைவரையும் பாலிசிதாரர் ஆக்குவதன் மூலம், மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை தடுக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட அரசுப்பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால், மாணவர்களின் எதிர்கால நலன் காக்கப்படும்" என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...