மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வு முறையை மாற்ற வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் யுபிஎஸ்சி அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திய ஏராளமான மாணவர்கள் கைது
செய்யப்பட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடந்துகொண்டிருப்பதாகவும், ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் உத்தரவிற்கிணங்க ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியதாகவும், இந்த ஆலோசனையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் இணை மந்திரி ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கிராமப்புற மாணவர்களும் திறனறித் தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து வரும் 3 நபர் கமிட்டி, விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முதல்நிலை தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் ராஜ்நாத் சிங்.