தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மாணவ
மாணவியருக்கு தொழில்நுட்ப வேலை வாய்ப்பை பெறுவதற்கு உதவும் வகையில் காகித ஆலை அருகே தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் தொழிற்பயிற்சி நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் தேசிய பயிற்சிக் குழுமத்தின் அங்கீகாரம் பெற்ற இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014-15ம் கல்வி ஆண்டு முதல் தொழிற்பயிற்சி வகுப்பு துவக்கப்பட உள்ளது.
இங்கு மின்சாரப் பணியாளர் (எலக்ட்ரீஷியன்), பொருத்துனர் (பிட்டர்) ஆகிய பிரிவுகளுக்கு இரண்டாண்டு கால பயிற்சியும், பற்ற வைப்பவர் (வெல்டர்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 16ம் தேதி மாலை 5.00 மணிக்குள் டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்து சேர வேண்டும்.
தகுதியுள்ள மாணவ மாணவியர் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்