''இந்திய குடிமக்கள் அனைவருக்கும், படிப்படியாக தேசிய அடையாள
அட்டை வழங்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:இந்திய குடிமக்கள் யார்; குடிமக்கள் அல்லாதவர்கள் யார் என்பதை, நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம். உண்மையான இந்தியர்களை அடையாளம் காண, நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி, இது தொடர்பாக, சமீபத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு அலுவலக அதிகாரிகள் மற்றும் இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஆகியவற்றுடன், ஆலோசனை நடத்தி உள்ளார்.
மக்கள் தொகை பதிவேடு
உண்மையான இந்தியர்கள் யார்; இந்தியர்கள் அல்லாதவர்கள் யார் யார் என்பதை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அலுவலகம் அடையாளம் காணும். அதன்பின், உண்மையான இந்திய குடிமக்கள் அனைவருக்கும், தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.வேலி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எல்லைகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள எல்லைப் பகுதிகள் வழியாக, சட்ட விரோதமாக ஊடுருவுவோரை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்திய - வங்கதேச எல்லைப்பகுதி, 4,096 கி.மீ., நீளம் உடையது. இதில், 3,300 கி.மீ., துாரத்திற்கு வேலி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது, 500 கி.மீ., துாரத்திற்கு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆற்றுப் படுகைகள், மலைப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளில், வேலி அமைப்பதில், மத்திய அரசு பல சிரமங்களை சந்தித்து வருகிறது.இவ்வாறு, அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
குடிமக்கள் சட்டம்
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:கடந்த, 2003ல், 'குடிமக்கள் சட்டம் - 1955'ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 14-ஏ என்ற சட்டப்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. அதில், இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் விவரம் அடங்கிய, 'இந்திய குடிமக்கள் தேசிய பதிவேட்டை' மத்திய அரசு கட்டாயம் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். இதற்காக தேசிய பதிவேடு ஆணையம் அமைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கிரண் ரிஜிஜு கூறினார்.