அனைத்து மாநிலங்களிலும், பல கட்டமாக, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனைகளை, மத்திய அரசு நிறுவ உள்ளதை அறிந்தேன். தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தகுதியான
மூன்று அல்லது நான்கு இடங்களை, தேர்வு செய்யும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்து கடிதம் கிடைத்துள்ளது.மத்திய அரசின் இந்த முயற்சிக்கு நன்றி. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக முதல்கட்டமாக தேர்வு செய்யப்படும் மாநிலங்களில், தமிழகத்தையும் சேர்த்து, இந்த நிதியாண்டிலேயே, தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.
சாலை வசதி:
இத்திட்டத்திற்காக, மத்திய அரசு கோரியுள்ள நிலம், காஞ்சிபுரம் மாவட்டம் - செங்கல்பட்டு; புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டை டவுன்; தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி; ஈரோடு மாவட்டம் - பெருந்துறை; மதுரை மாவட்டம் - தோப்பூர் பகுதிகளில், தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இந்த பகுதிகளில், உரிய சாலை வசதிகள் இருப்பதுடன், நிலமும், ஏற்கனவே, மாநில அரசு மற்றும் அதன் துறைகளின் பொறுப்பில் உள்ளது. மேலும், இந்த ஐந்து பகுதிகளிலும், குடிநீர், மின்சார வசதியுடன், ரயில் மற்றும் விமான போக்குவரத்து தொடர்பும் உள்ளது. மருத்துவ சேவைஇந்த நிலங்கள் தொடர்பாக, மத்திய அரசு கேட்கும் அனைத்து தகவல்களையும், அளிக்கும் படி, தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைந்தால், ஏற்கனவே தமிழகத்தில் வழங்கப்படும் மருத்துவ கல்வி மேம்பாடு அடையும். மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான மருத்துவ சேவை, உயர்தரத்தில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.