அரசுப் பள்ளிக்கு ஜப்பான் வங்கி உதவி

 ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ஐப்பான் நாட்டை சேர்ந்த வங்கி சார்பில் இருக்கைகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் -
திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஐப்பான் நாட்டை சேர்ந்த பேங்க் ஆப் டோக்யோ மிட்சுபிட்ஷி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழா வங்கியின் துணை தலைவர் மொரிமுறா தலைமையில் நடந்தது.

ஜப்பான் நாட்டு சென்னை துணை தூதர் கோஜி சுகியமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கான ஏழு லட்சம் மதிப்பிலான 14 மேஜை மற்றும் மர இருக்கைகள் வழங்கினார்.

விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக செல்வி புருகாவா வரவேற்றார். நிறைவாக மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அன்புச்செல்வி நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...