திருட்டுகளை தடுக்க பள்ளிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதி
அல்லாத மற்ற பாடப்பிரிவுகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச லேப் - டாப் வழங்குகிறது.
கடந்த கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்பட சில இடங்களில் பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த இலவச லேப் - டாப்கள் திருடப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸ் எஸ்.பி. அலுவலகங்களில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் எந்த பள்ளிக்கு எத்தனை லேப் - டாப் வந்துள்ளன. அது எப்போது யார் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்பணிமுடியும் வரை பள்ளிகளில் தலா இரண்டு போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.