கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கு: தமிழக அரசு மனு தள்ளுபடி

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் கூடுதல் நிவாரணத்துக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 24 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்விபத்தில் இறந்துபோன குழந்தைகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்ச ருபாய் நிவாரண உதவி வழங்கியது. ஆனால் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், சண்முகம் குழு தனது பணியை தொடரலாம் என்றும் அனுமதி வழங்கியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...